குடவாசல்:
குடவாசல் அருகே இலவங்கார்குடி பவுத்திர மாணிக்கம் , செம்மங்குடி, பெரும்பண்ணையூர், குடவாசல் பயணியர் மாளிகை ஆகிய இடங்களில் கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.
டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏ.டி.எஸ். கொசு உற்பத்தி ஆகும் தண்ணீர் தேங்கும் இடங்களையும் செம்மங்குடியில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் குவிக்கப்பட்டுள்ள பழைய பொருட்களையும் உடனே அகற்ற உத்தரவிட்டார்.
இது போன்று குடவாசல் பயணியர் மாளிகையில் பிளாஸ்டிக், பழைய கழிவு பொருள்களை அகற்றி கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க உத்தரவிட்டார்.
உதவி கலெக்டர் முத்துமீனாட்சி மற்றும் தாசில்தார்கள் ராஜன்பாபு, சண்முகவடிவேலு, வருவாய் ஆய்வர் ஞானப்பிரகாசம் உள்பட பலர் உடன் சென்றனர்.