செய்திகள்

பாக்தாத் மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் பலி

ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாலை மலர்

டமாஸ்கஸ்:

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இமாம் மஹதி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.