தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,75,678 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,670 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது சற்று ஆறுதலான செய்தியாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 18வது நாளாக 2 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,475 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் இந்திய அளவில் முதல் பெருநகரம் சென்னையில் தான் அதிக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நாள்தோறும் 15,000 வரை கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது.