செய்திகள்

மாநகர பஸ்சில் பயணம் செய்ய 1000 ரூபாய் மாதாந்திர பஸ்பாசுக்கு அமோக வரவேற்பு

மாநகர பஸ்சில் பயணம் செய்ய 1000 ரூபாய் மாதாந்திர பஸ்பாசுக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் பஸ் கட்டண உயர்த்தப்பட்டது.

அப்போது 1000 ரூபாய்க்கான மாதாந்திர சலுகை பயணச்சீட்டு நிறுத்தப்பட்டது. இதேபோல் 1 நாள் பயன்படுத்த கூடிய 50 ரூபாய்க்கான சலுகை பயணசீட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில் 1000 ரூபாய்க்கான மாதாந்திர பயணசீட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டிக்கெட்டை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் கட்டணம் உயர்ந்தாலும், 1000 ரூபாய் மாதாந்திர டிக்கெட் கட்டணம் பழைய விலையிலேயே வழங்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 60 ஆயிரம் பேர் 1000 ரூபாய் டிக்கெட் வாங்கி இருந்தனர். மார்ச் மாதம் 85 ஆயிரம்பேர் டிக்கெட் வாங்கினார்கள். இந்த மாதம் 91 ஆயிரம் பேர் 1000 ரூபாய்க்கான சலுகை பயணச்சீட்டை வாங்கி உள்ளனர்.

ஆனால் 13 நாள் பயணம் செய்ய கூடிய 50 ரூபாய்க்கான டிக்கெட்டை நிறைய பேர் தவறாக பயன்படுத்தி மற்றவர்களுக்கு பயணம் செய்ய கொடுப்பதால் அந்த டிக்கெட் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 20 நாட்களுக்கான கட்டணம் செலுத்தினால் 30 நாள் பயணம் செய்யும் சலுகை பயணச் சீட்டும் பயணிகளைடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews