உலன் பாடூர்:
மங்கோலியா நாட்டின் அதிபராக உள்ள எல்பெக்டோர்ஜ் சகியாபின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
மங்கோலியா மக்கள் கட்சி சார்பில் என்க்போல்ட் மியிகோம்பி, முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் பட்டுல்கா கல்ட்மாவும், மங்கோலியா மக்கள் புரட்சிகர கட்சி சார்பில் கன்பாடர் சைகூ ஆகிய மூவரும் களத்தில் உள்ளனர்.
எல்பெக்டோர்ஜ் சகியா கடந்த இரண்டு முறை அதிபர் பதவி வகித்துவிட்டதால், இந்த தேர்தலில் போட்டியிட அவர் தகுதி அற்றவர் ஆகிறார்.
இந்நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த தேர்தலில் 50 சதவீதம் வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். வேட்பாளர்கள் எவரும் 50 சதவீத வாக்குகள் பெறவில்லை என்றால், ஜூலை 10-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும்.