கோப்பு படம் 
செய்திகள்

மதுரையில் நகை வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி: கணவன்-மனைவிக்கு வலைவீச்சு

மதுரையில் நகை வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது குறித்து கணவன்-மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது40). இவர் அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளார். மேலும் அடகு நகைகளை மீட்டு கமி‌ஷன் பெற்றுக்கொள்வார்.

சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராகேஷ், அவரது மனைவி குருபிரியா ஆகியோர் ஆரோக்கியராஜை தொடர்பு கொண்டனர்.

தங்களது நகை, வங்கியில் அடகு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதை மீட்க பணம் கொடுத்தால் அதற்கான கமி‌ஷன் தொகையுடன் சேர்த்து அசலையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினர்.

இதை நம்பி ராகேஷ் தம்பதியிடம் ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை நகைகளை மீட்க ஆரோக்கியராஜ் கொடுத்தார். வங்கிக்கு சென்ற அவர்கள் நகையை மீட்டு தலைமறைவானார்கள். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆரோக்கியராஜ் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகேஷ், குருபிரியாவை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT