சென்னை:
ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் செந்தாமரை கண்ணன் (22). ரஷ்யாவில் தொழில் செய்வதற்காக சென்றார். ரூ.3 லட்சம் எடுத்து சென்றார்.
அங்குசென்ற பின் பணத்தை டாலராக மாற்ற முயற்சித்தார். அவருக்கு உதவி செய்வதாக கூறி பஞ்சாப், கேரளா, மற்றும் தமிழகத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் முன்வந்தனர்.
செந்தாமரை கண்ணனை அழைத்து சென்று ஒரு அறையில் அடைத்து அவரிடம் இருந்த பணத்தை பறித்தனர். அவர் தர மறுக்கவே தாக்கியுள்ளனர். அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்தார்.
வெளிநாட்டில் இந்தியாவை சேர்ந்த வாலிபர்களே இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அளித்துள்ளது. பாஸ்போர்ட், விசாகையில் இருந்ததால் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பினார்.
பணம் பறித்த வாலிபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த செந்தாமரை கண்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பறித்துச் சென்ற வாலிபர்களின் பெயர் விவரங்களை கேட்டனர்.