குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் பெனிடிக் மார்ட்டின் (வயது 52). இவர் தனது நண்பரான கருங்கல் வழுதலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (71) என்பவருடன் சேர்ந்து கடந்த 2000-ம் ஆண்டு தக்கலை பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். தக்கலை பகுதியை சேர்ந்த நிஷா என்பவர் இங்கு ஊழியராக வேலை பார்த்தார்.
இந்த நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு குமரி மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார், அமிர்தாஸ், தேவராஜ் உள்பட 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி டிராவல்ஸ் உரிமையாளர்கள் ரூ.4 லட்சத்து 58 ஆயிரம் மோசடி செய்தனர். இதுதொடர்பாக 7 பேரும் தனித்தனியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், ராஜேந்திரன் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து, அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்தை கொடுத்து அதற்கான 9 சதவீத வட்டியும் 2 மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.