செய்திகள்

இங்கிலாந்து தொடர்: மொகமது ஷமி, பும்ராவிற்கு வாசிம் அக்ரம் ஆலோசனை

இங்கிலாந்து தொடரில் மொகமது ஷமி மற்றும் பும்ரா சிறப்பாக பந்து வீச, பாகிஸ்தான் வேகப்பந்து ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆலோசனை வழங்கியுள்ளார். #SAvIND

மாலை மலர்

இந்தியா இந்த வருடத்தில் இங்கிலாந்து சென்று விளையாட இருக்கிறது. ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்தில் இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போதே விவாதம் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இங்கிலாந்தில் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் மொகமது ஷமி மற்றும் பும்ரா இதைச் செய்ய வேண்டும் என்று வாசிம் அக்ரம் ஆலோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் ‘‘மொகமது ஷமி சிறந்த பந்து வீச்சாளர். ஆனால், சில நேரங்களில் அவர் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார். ஒரு வேகப்பந்து வீச்சாளராக போட்டியின் சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் வேகமாக ஓடிவந்து பந்து வீச வேண்டும். அதேபோல், பேட்ஸ்மேன்களை முன்னால் வந்து விளையாட தூண்டும் வகையில் முயற்சி செய்ய வேண்டும்.

மொகமது ஷமி வந்து வீச வரும்போது, க்ரீஸ்க்குள் காலை ஊன்றுவதற்கு முந்தைய ஸ்டெப்பை குறுகியதாக வைக்கிறார். அவருடைய பந்து வீச்சில் சரியான ரிதம் கிடைக்கும்போது, சரியாக காலடிகளை எடுத்து வைக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் குறுகிய ஸ்டெப் வைக்கும்போது பந்து வீச்சு ஆக்சன் முழுமையடைவதில்லை. இதனால் அவர்களின் வேகம் அதிக அளவில் குறைகிறது.

பும்ரா இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் விளையாடினால், அவர் சிறந்த பந்து வீச்சாளராக முடியும். ஆனால், ஐபிஎல் போட்டியை தவிர்த்து, கவுன்டி ஆட்டத்தில் விளையாடுமாறு பிசிசிஐ அவரிடம் சொல்ல வேண்டும்.