செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன்களில் தலைசிறந்தவர் அசாருதீன்: ரணதுங்கா சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணிக்காக செயல்பட்ட கேப்டன்களில் மிகவும் தலைசிறந்த கேப்டன் முகமது அசாருதீன்தான் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறியுள்ளார்.

மாலை மலர்

தற்போது இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றபோது ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் அர்ஜூனா ரணதுங்கா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ‘‘இந்திய அணியை வழிநடத்திச் சென்றதில் அசாருதீன்தான் தலைசிறந்த கேப்டன். அவர் ஒரு விவேகமான தலைவர். இந்த நகரத்தில் எனக்கு பிடித்த நினைவுகள் உள்ளன. ஆனால், தற்போதைய இந்த மைதானத்தில் நான் விளையாடியது கிடையாது. ஆனால், பழைய மைதானமான லால் பகதூர் மைதானத்தில் விளையாடியுள்ளேன். இதில் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 90 ரன்கள் குவித்துள்ளேன். அது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.