செய்திகள்

ஓ.பன்னீர் செல்வத்திடம் பிரதமர் மோடி போன் மூலம் வாழ்த்து - தமிழகத்திற்கு தேவையானதை செய்வதாக உறுதி

தமிழக துணை முதல்வராக இன்று பதவியேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

தமிழக துணை முதல்வராக இன்று பதவியேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இன்று இணைந்தன. இதனையடுத்து அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர், நிதி அமைச்சர் பதவியும், பாண்டியராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறையும் வழங்கப்பட்டது.

மாலை 4.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாண்டியராஜன் இருவருக்கும் தமிழக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் இருவரும் தலைமைச் செயலகத்தில் வந்து பொறுப்பேற்று கொண்டனர்.

இந்நிலையில், துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திரமோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்பொழுது, தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார் என பதிவிட்டுள்ளார்.