செய்திகள்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குடும்பத்தாருடன் மோடி சந்திப்பு

முன்னாள் பிரதமர், அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் வீட்டுக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசினார். #Modi #Vajpayee

மாலை மலர்

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (94) கடந்த 16-ம் தேதி உடல் நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன்  நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய  ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடலுக்கு வளர்ப்பு மகள் தகனம் செய்தார்.

டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆறுகளில் கரைக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் வீட்டுக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரது குடும்பத்தாரை சந்தித்து பேசினார். இந்த தகவலை புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ளார். #Modi  #Vajpayee