கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் இத்திட்டப் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் முதல்வர்கள், துறை சார்ந்த மந்திரிகள் பங்கேற்றனர்.