சென்னை:
தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் கு.செல்வ பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பா.ஜனதா அரசு அடித்தட்டு மக்களுக்கு எதிரான அரசு. ஜனாதிபதி தேர்தலில் தலித்தை வேட்பாளராக தேர்வு செய்தது மோடியின் மோசடி வேலை. உ.பி., பீகாரில் தலித்துகள் அதிகாரத்துக்கு வருவதை தடுக்கும் முயற்சி. காங்கிரஸ் தான் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைப்பது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எத்தனையோ தலித்துகள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் வகுப்பு வாதத்துக்கு அப்பாற்பட்டு இருந்தார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
தமிழக காங்கிரசில் 7 மாவட்டங்களுக்கு தலித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.அவர்கள் திருநாவுக்கரசரை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.