செய்திகள்

தேனி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

தேனியில் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #TheniForestFire #TheniFire #Modi #Condolences

மாலை மலர்

தேனியில் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் 10 பேர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகி பலி ஆனார்கள். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்து குறித்து விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், தீ விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இதில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்