பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் சுமார் 350 தொகுதிகளில் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட முக்கிய பிரமுகர்கள் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
அவ்வகையில், பிற்பகல் 3 மணிவரை நிலவரப்படி உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி 4 லட்சத்து 41 ஆயிரத்து 59 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 87 ஆயிரத்து 338 வாக்குகளை பெற்றார். அங்கு சுமார் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றிமுகம் காட்டி வருகிறார்.