கோப்பு படம் 
செய்திகள்

சென்னையை குளிர்வித்த செல்ல மழை

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பெய்த மிதமான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது. அதற்கேற்ப சில மாவட்டங்களில் நேற்று பரவலான மழை பெய்தது.

சென்னை நகருக்குட்பட்ட சில பகுதிகளில் நேற்று பின்னிரவிலும் இன்று அதிகாலையில் லேசான தூறல் மழை பெய்தது.

இந்நிலையில், இன்று மாலை சுமார் 6 மணியில் இருந்து சென்னைக்குட்பட்ட பாரிமுனை, பூங்காநகர்,

அனகாபுதூர், திருவோற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

கோடைக்காலம் கடந்து பலநாட்களாகியும் ஆகியும் சுட்டெரிக்கும் வெயிலின் வெம்மையால் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகள் நகரின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இன்று மிதமான மழை பெய்ததால் உண்டான குளிர்ச்சியான சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.