சிவகாசி:
சிவகாசி நகராட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வார்டுகளுக்கு பொது சுகாதார வளாகம் அமைத்து பராமரித்து வருகிறது.
சுகாதார வளாகம் இல்லாத பகுதிகள் மற்றும் திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதியில் சிவகாசி நகராட்சி மற்றும் ஜே.சி.ஐ. சார்பாக சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் சுகாதார வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னாள் நகராட்சி தலைவர் அசோகன், ஜே.சி.ஐ. தலைவர் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் முகமதுசீராஜ், அ.தி.மு.க. நகர செயலாளர் அசன் பதுருதீன், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல், தலைமை கழக பேச்சாளர் சின்னத்தம்பி, பேரவை திருமுருகன், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews