புதுடெல்லி:
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோபோன் கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஃபீச்சர்போன் வாடிக்கையாளர்கள் ரிலைன்ஸ் ஜியோ மூலம் இண்டர்நெட் வசதி வழங்கும் நோக்கில் ஜியோபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜியோபோன்களின் முதற்கட்ட விற்பனை துவங்கிய சில நாட்களில் நிறைவுற்ற நிலையில், இரண்டாம் கட்ட விற்பனை துவங்கியுள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு ஜியோபோன் மிக எளிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிரபல மொபைல் வாலெட் நிறுவனமான மொபிகுவிக் இணைந்துள்ளன.
அந்த வகையில் ஜியோபோன் வாங்க விரும்புவோர் மொபிகுவிக் செயலியில் இருந்தபடியே புத்தம் புதிய ஜியோபோனினை முன்பதிவு செய்ய முடியும். இந்தியாவில் 10 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள மொபிகுவிக் வாலெட் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கான ஜியோபோன்களை நொடிகளில் முன்பதிவு செய்ய முடியும்.
மொபைல் போன் ரீசார்ஜ் செய்வதை போன்று மிக எளிமையாக ஜியோபோன் முன்பதிவுகளை மொபிகுவிக் செயலியை பயன்படுத்தி மேற்கொள்ள முடியும் என மொபிகுவிக் தெரிவித்துள்ளது.
ஜியோபோன் சிறப்பம்சங்கள்:
- 2.4 இன்ச் 320x240 பிக்சல் டிஸ்ப்ளே
- 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிரசஸர்
- 512 எம்பி ரேம்
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 2 எம்பி பிரைமரி கேமரா
- 0.3 எம்பி செல்ஃபி கேமரா
- 4ஜி, எல்டிஇ. வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி 2.0
- 2000 எம்ஏஎச் பேட்டரி
ஜியோபோன் தமிழ் உள்பட மொத்தம் 22 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருப்பதோடு, வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, ஜியோபோனினை டிவியுடன் இணைக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஜியோபோனில் வழங்கப்பட்டுள்ள வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை கொண்டு குரல் போனினை இயக்க முடியும்.