செய்திகள்

மோ பாரா தனது கடைசி 5000 மீ ஓட்டத்தில் 0.03 வினாடி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்

இங்கிலாந்தின் தலைசிறந்த மாரத்தான் ஓட்டப் பந்தய வீரரான மோ பாரா தனது கடைசி 5000 மீ ஓட்டத்தில் 0.03 வினாடி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார்.

இந்நிலையில் சுரிச் நகரில் டைமண்ட் லீக் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் ஓடுவதுடன் தனது ஓட்டம் முடிவடைந்து என்று அறிவித்தார். அதன்படி நேற்று தனது கடைசி ஓட்டத்தில் கலந்து கொண்டார். அவருக்கு போட்டியாக கருதப்படும் முக்தார் எட்ரிஸும் இதில் கலந்து கொண்டார்.

முக்தார் எட்ரிஸ், செலிமோ ஆகியோர் மோ பாராவிற்கு கடும் சவாலாக விளங்கினார்கள். என்றாலும் கடைசி சுற்றில் மோ பாரா சிறப்பாக ஓடி 13 நிமிடங்கள் 06.06 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார்.

செமிலா 13 நிமிடம் 06.09 வினாடிகளில் கடந்து 2-வது இடத்தையும், எட்ரிஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றியால் வெற்றி முகத்தோடு மோ பாரா விடைபெற்றார்.

SCROLL FOR NEXT