முக ஸ்டாலின் 
செய்திகள்

கிசான் திட்ட முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

கிசான் நிதியுதவி திட்ட முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ரூ.110 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

கிசான் நிதியுதவி திட்ட முறைகேட்டில் உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும்.

6 லட்சம் போலி பயனாளிகள் சேருவதற்குக் காரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.