செய்திகள்

கிருஷ்ணகிரி அணையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டணம் அருகே உள்ள கே.ஆர்.பி. அணையின் ‌ஷட்டர் உடைந்தது. பின்னர் இந்த ‌ஷட்டரை அகற்றி விட்டு புதிய ‌ஷட்டர் பொருத்தப்பட்டது.

இன்று காலை கே.ஆர்.பி. அணையை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அணையில் ‌ஷட்டர் மாற்றப்பட் டுள்ளதையும் பார்த்தார்.

அணையின் நீர்இருப்பு குறித்தும், விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இருக்கிறதா? என்பது குறித்தும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்து பேசினார். அதன்பிறகு அங்கிநாயனப்பள்ளி அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை பார்வையிட்டார். அதன்பிறகு அவர் காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். #tamilnews