மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

எப்படியாவது இந்தியை திணித்துவிட மத்திய அரசு முயற்சி- மு.க.ஸ்டாலின் தாக்கு

எந்த பக்கத்தில் இருந்தாவது எப்படியாவது இந்தியை திணித்துவிட மத்திய அரசு முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மாலை மலர்

இந்தி தினத்தையொட்டி பாஜக தலைவர் அமித் ஷா “ஒரே நாடு ஒரே மொழி” என்ற அடிப்படையில் வெளியிட்டுள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்றும் கூறியிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.