விஜயகாந்த் - முக ஸ்டாலின் 
செய்திகள்

விஜயகாந்த் பிறந்தநாள்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள். இன்றுடன் 68 வயது முடிவடைந்து 69-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி கட்சியினர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

விஜயகாந்த் பல்லாண்டு வாழவும் நலமும் குணமும் திடமும் பெற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT