தற்போது லண்டனில் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆட்டங்களை முக ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் நேரில் சென்று பார்த்து ரசித்துள்ளார். அப்போது விஜய் அமிர்தராஜ் அவரை வரவேற்றார்.
இதற்குரிய படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘‘விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. டென்னிசில் புகழ்பெற்ற சென்னையை சேர்ந்த விஜய் அமிர்தராஜ்-ஐ சந்தித்தேன்’’ என பதிவிட்டுள்ளார்.
லண்டன் சென்றுள்ள முக ஸ்டாலின் ஒருவாரம் அங்கு தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
I had the opportunity to watch Wimbledon Lawn Tennis Championships and to meet with Chennai-born tennis legend Vijay Amritraj in London. pic.twitter.com/uI1dm76HAO