செய்திகள்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வருகை

கோவையில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

மாலை மலர்

கோவை:

கோவை சிவானந்தா காலனியில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராமசாமி, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கவேலு, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் மாணிக்கம் தாகு, இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலை வர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அப்துல்பாசித், திராவிடர் கழக பொருளாளர் பிறைநுதல் செல்வி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர்.ஈஸ்வரன், எஸ்.டி. பி.ஐ. தலைவர் தெஹலான் பாகவி,

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் கதிரவன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இதில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதியம் கோவை வருகிறார். பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர் இன்று இரவே சென்னை புறப்பட்டு செல்கிறார்.