செய்திகள்

காவிரி உரிமை மீட்பு பயணத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயண விவரம்

காவிரி உரிமை மீட்பு பயணத்தில் மு.க.ஸ்டாலினின் இன்றைய (10-ந்தேதி) மற்றும் நாளைய (11-ந்தேதி) பயண விவரங்களை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெற்று வருகிறது.

அதில், மு.க.ஸ்டாலினின் இன்றைய (10-ந்தேதி) மற்றும் நாளைய (11-ந்தேதி) பயண விவரங்களை தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இன்று காலை 7 மணி - திருவாரூர், துர்காலயா ரோடு, பவித்திரமாணிக்கம், காட்டூர், அகரத்திருநல்லூர், திருக்கண்ணமங்கை, அம்மையப்பன், ஆனைதென்பாதி, குழிக்கரை, தேவர்கண்டநல்லூர்.

மாலை 4 மணி - கமலாபுரம், கூத்தாநல்லூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி.

நாளை காலை 7 மணி - பரவை, பாப்பாகோவில், சிக்கல்பத்து, அகரஒரத்தூர், ஒரத்தூர், ஆயில்மலை, அகலங்கால், செம்பியமாதேவி, வடுகச்சேரி, புதுச்சேரி, ஆவராணி, சிக்கல், புத்தூர்.

மாலை 4 மணி - காரைக்கால், பொறையார், ஆயப்பாடி, திருக்களஞ்சேரி, எடுத்துக்கட்டி, இலுப்பூர், திருவிளையாட்டம், ஈச்சங்குடி, மேமத்தூர், செம்பனார்கோவில், மேலப்பாதி, மயிலாடுதுறை.