தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புதுவை வழியாக சென்றார்.
அப்போது புதுவையில் உள்ள ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அவரிடம் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி கலவரத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருந்ததாக கூறியது பற்றி கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
ரஜினி இவ்வாறு பேசி இருப்பது அவரது சொந்தக் குரலா? என்று தெரியவில்லை. அ.தி.மு.க., பாரதிய ஜனதாவின் குரல் போல் தெரிகிறது.
போராட்டம் நடத்தக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. வாழ்க்கையே போராட்டம்தான். போராட்டம் இல்லாமல் எதையும் பெற முடியாது.
சுதந்திர போராட்டமாக இருக்கலாம். ஜல்லிக்கட்டு போராட்டமாக இருக்கலாம். போராட்டம் நடத்தாமல் எதையும் சாதித்தது இல்லை.