செய்திகள்

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் - மு.க.ஸ்டாலின்

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். #MKStalin #DMK

மாலை மலர்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #DMK