முக ஸ்டாலின் 
செய்திகள்

ஜெயலலிதா மரண சதியை வெளிக்கொண்டு வர அரசு தயாராக இல்லை- முக ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை முதல்வர், துணை முதல்வர் முடக்கி வைத்துள்ளனர் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் தற்போது விசாரித்து வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

ஜெயலலிதா மரணம் தொடர்பான சதியை வெளிக்கொண்டு வர தமிழக அரசு தயாராக இல்லை என்பது அம்பலமாகிறது. ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு 37 மாதங்கள் உருண்டோடியபோதும் விசாரணை இன்னும் முடியவில்லை. 

திமுக ஆட்சி அமைந்ததும் ஜெ. மரண சதி விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT