சென்னை:
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் எம்.பி. இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்காக சமாஜ் வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோருக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-
மாபெரும் இடைத்தேர்தல் வெற்றிக்கு காரணமான அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் முக்கியமான மைல்கல்லாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது. ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற தன்மை ஆகியவையே என்றைக்கும் உயர்ந்தவை என்பதை பொது மக்கள் மீண்டும் நிரூபித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Tamilnews