மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்- மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்

புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.

புதுச்சேரி:

புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிடுகிறார்.

நாளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜான்குமாருக்கு ஆதரவாக காமராஜர் நகர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

நாளை மாலை தென்றல் நகர் ஆட்டோ நிறுத்தம் அருகில் இருந்து தனது பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

ரெயின்போ நகர் பிரெஞ்சு கார்னர், கிருஷ்ணாநகர் 1-வது குறுக்குத்தெரு எழில் நகர் சந்திப்பு, 100 அடி ரோடு காமராஜர் மணிமண்டபம், சாமிபிள்ளை தோட்டம் ஆகிய இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

அவருடன் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT