மு.க.ஸ்டாலின் 
செய்திகள்

சட்டமன்றத்தில் அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்பட்டவர் அமைச்சர் துரைக்கண்ணு -மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவெய்திய செய்தி கேட்டுத்துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்.

மூன்று முறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று 2016-ல் வேளாண்துறை அமைச்சராக பதவியேற்றார்.

சட்டமன்றத்தில் அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்பட்ட அமைச்சர்.

பொதுவாழ்வில் உள்ள அனைவரும், அனைத்து அரசியல் கட்சியினரும் சுய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சரை இழந்து வாடும் குடும்பத்தினர், சக அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதல்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.