மத்திய முன்னாள் மந்திரியும், டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான ஷீலா தீட்சித் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'பாராளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் போட்டியிட்டு வென்ற ஷீலா தீட்சித், முன்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரியாகவும், பிரதமர் அலுவலகத்துக்கான இணை மந்திரியாகவும் சிறப்பாக செயலாற்றியவர்.
காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், மூன்று முறை டெல்லி முதல் மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். டெல்லி முதல் மந்திரியாக பதவி வகித்த காலத்தில் தனது நிர்வாகத் திறனால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.