முக ஸ்டாலின் 
செய்திகள்

ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வில் தமிழ் புறக்கணிப்பு - ஸ்டாலின் கண்டனம்

ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்தினால் போதும் என ரெயில்வே அறிவித்துள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்தினால் போதும் என ரெயில்வே அறிவித்துள்ளது. கேள்வித்தாள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என உரிமை கோர முடியாது என அறிவித்துள்ள ரெயில்வேயின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது 

தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரெயில்வே வாரியம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மாபெரும் மொழிப் போராட்டத்திற்கான களத்தை மீண்டும் அமைத்திட வேண்டாம்  என தெரிவித்துள்ளார்.