செய்திகள்

கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்

கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்காவிட்டால் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #StalinProtest

மாலை மலர்

திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், அணையின் மதகுகள் உடைந்ததற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என கூறினார். மேலும், மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 40 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை என்று குற்றம்சாட்டினார்.