செய்திகள்

மு.க.ஸ்டாலின்- கூட்டணி தலைவர்கள் இன்று பிரசாரம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி தலைவர்கள் இன்று பிரசாரம் செய்கின்றனர்.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அங்கு பிரசாரம் களை கட்டுகிறது. தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று மாலை நடக்கிறது. தண்டை யார்பேட்டை- வ.உ.சி.நகர் சந்திப்பு பகுதியில் மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.

கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கே.எம்.காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, ஆர்.எம்.வீரப்பன், ஈ.ஆர்.ஈஸ்வரன், சுப.வீரபாண்டியன், என்.ஆர்.தனபாலன், எர்ணாவூர் நாராயணன், பொன்குமார், எஸ்றா சற்குணம், அதியமான், கு.செல்லமுத்து, திருப்பூர் அல்தாப், டாக்டர் சேதுராமன், பி.வி.கதிரவன், பி.என்.அம்மாவாசி, பஷீர் அகமது, இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் செய்துள்ளனர்.