செய்திகள்

மிதாலி ராஜ் சதம், வேதா அதிரடியால் நியூசி.க்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

பெண்கள் உலகக்கோப்பை தொடரில் வாழ்வா? சாவா? போட்டியில் மிதாலி ராஜின் சதம், வேதா அதிரடியால் நியூசிலாந்து வெற்றிக்கு 266 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

மாலை மலர்

அதன்படி இந்தியாவின் மந்தனா, பூனம் ரவுத் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். பூனம் ரவுத் 4 ரன்னிலும், மந்தனா 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்தியா 21 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் மிதாலி ராஜ் உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேர்த்தியாக விளையாடியது. அரைசதம் அடித்த கவுர் 60 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷர்மா ரன் எடுக்காமல் வெளியேறினார்.


60 ரன்கள் அடித்த கவுர்

பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்கு மிதாலி ராஜுடன் வேதா கிருஷ்ண மூர்த்தி ஜோடி சேர்ந்தார். வேதா அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மறுமுனையில் விளையாடிய கேப்டன் மிதாலி ராஜ் 48-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அவர் 116 பந்தில் 10 பவுண்டரியுடன் இந்த சதத்தை கடந்தார்.

தொடர்ந்து விளையாடிய மிதாலி ராஜ் கடைசி ஓவரின் 3-வது பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 123 பந்தில் 11 பவுண்டரியுடன் 109 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய வேதா 45 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் குவித்து அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுக்கள் விழ, இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் சேர்த்துள்ளது.