செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே மார்க் ஷீட் வாங்கச் சென்ற இளம்பெண் மாயம்

ஆண்டிப்பட்டி அருகே மார்க் ஷீட் வாங்கச் சென்ற இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லகுமார் மகள் ரேவதி (வயது 21). இவர் விருதுநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று மார்க் ஷீட் வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிச் சென்றார்.

இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ரேவதி மாயமானாரா? அல்லது யாரும் கடத்திச் சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT