களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழப்பத்தையை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 56). விவசாயி. இவர் கடந்த 28-ந் தேதி மாலை வயலுக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சுடலைமுத்து குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது மனைவி முருகம்மாள் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுடலைமுத்துவை தேடி வருகின்றனர்.