செய்திகள்

மகாராஷ்டிராவில் 30 லட்சம் ரூபாயுடன் ஏ.டி.எம். இயந்திரத்தை கடத்திச் சென்ற கொள்ளையர்கள்

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் 30 லட்சம் ரூபாயுடன் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்துக்குட்பட்ட யாவத் என்ற இடத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது.

இன்று காலை வழக்கம்போல் இந்த மையத்தில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வந்தபோது உள்ளே ஏ.டி.எம். இயந்திரத்தை காணாமல் திடுக்கிட்டனர். இதுதொடர்பான தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அருகாமையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

சுமார் 30 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த அந்த ஏ.டி.எம். இயந்திரத்தை சில கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவில் வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT