பாட்னா:
பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் வழிமறித்து தவறாக பேசினர். பின்னர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். அவளது ஆடைகளை பிடித்து இழுத்ததில் ஆடை கிழிந்துள்ளது. தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அவர்கள் விடாமல் தொந்தரவுசெய்துள்ளனர். இச்சம்பவங்களை அந்த கும்பலைச் சேர்ந்த வாலிபர் வீடியோ எடுத்துள்ளார். அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து வைரலாக பரவியுள்ளது.
இதுகுறித்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த வாலிபரை சந்தித்தாகவும், அதனை பிடிக்காத கும்பல் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பட்டப் பகலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதனை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் சிறுமி கதறி அழுவது அனைவரையும் கண்கலங்கச் செய்கிறது. #bihar