செய்திகள்

தேவதானப்பட்டி அருகே மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்

தேவதானப்பட்டி அருகே மைனர் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

மாலை மலர்

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே குள்ளபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது28). அதே பகுதியில் 16 வயது சிறுமி தாய் தந்தை இறந்து விட்டதால் ஆதரவின்றி இருந்துள்ளார். எனவே கண்ணன் அந்த சிறுமியை திருமணம் செய்து அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளார்.

கண்ணன் மற்றும் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இது குறித்து அறிந்ததும் மாவட்ட சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 18 வயது பூர்த்தியாகாத பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று அறிவுறுத்தினர்.

இரு வீட்டாரையும் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகும்வரை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என எழுதி வாங்கினர்.

இது குறித்து அதிகாரிகள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.