கைது 
செய்திகள்

மீஞ்சூர் அருகே வழிப்பறி- சென்னை வாலிபர்கள் 2 பேர் கைது

மீஞ்சூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பொன்னேரி:

சென்னையை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மீஞ்சூரை அடுத்த கொண்டகரை அருகில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் பாஸ்கரை கத்தி முனையில் மிரட்டி செல்போன், ரூ. 1000 ஆகியவற்றை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜசேகர், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.