செய்திகள்

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த பங்கம் பேட்டையை சேர்ந்தவர் ஹரிம். இவரது மகள் ரக்சனாபேகம்(22) தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி கல்லூரியில் சான்றிதழ் வாங்கி வருவதாக கூறி சென்ற ரக்சனா பேகம் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அத்திபட்டு பாரதி தெருவை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகள் பவித்ரா (22). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பவித்ரா திரும்பவில்லை.

SCROLL FOR NEXT