நினைவு மண்டபத்தில் தூய்மைப்பணி நடைபெற்ற காட்சி. 
செய்திகள்

திருப்பூர் குமரன் பிறந்தநாளையொட்டி நினைவு மண்டபத்தில் தூய்மைப்பணிகள்-அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர்

நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு நாளை காலை 9 மணிக்கு அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

திருப்பூர்:

சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 118-வது பிறந்தநாள் நாளை 4-ந்தேதி  (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி  நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு நாளை காலை 9 மணிக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி  செல்வராஜ் , திருப்பூர் கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், தியாகி திருப்பூர் குமரன் அறக்கட்டளை, சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர் திரளாக பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர்.

இதையொட்டி இன்று காலை திருப்பூர் நினைவு மண்டபம் மற்றும் நினைவு ஸ்தூபியில் தூய்மைப்பணிகள் நடைபெற்றது.

SCROLL FOR NEXT