பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள் 
செய்திகள்

பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள்- அரசியல் தலைவர்கள் மரியாதை

பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

மாலை மலர்

சென்னை:

மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்தநாள் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பாரதியாரின் திருவுருவச்சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சிலைக்கு அருகில் பாரதியார் புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன் ஆகியோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். 

முன்னதாக திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பாரதியார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.  அப்போது, தமிழர்கள் தொட்டில் கட்டி தொடங்கி வைத்த கலாச்சாரம் தான் இன்று உலகம் முழுவதும் புகழ் பெற்று இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.