செய்திகள்

ஆட்சியையும்-கட்சியையும் யாரும் அசைக்க முடியாது: வெல்லமண்டி நடராஜன் பேச்சு

ரத்தம் சிந்தி காத்த அதிமுக இயக்கத்தையும் ஆட்சியையும் யாரும் அசைக்க முடியாது என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.

திருச்சி:

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பாலக்கரை பகுதி சார்பில் கீரைக்கொல்லை பஜாரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. பகுதி செயலாளர் டி.எ.எஸ். கலிலுல் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில  இளைஞர் பாசறை செயலாளர் குமார் எம்.பி., அமைச்சர் வளர்மதி,  நகைச்சுவை நடிகை வாசுகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும் போது கூறியதாவது:-

அண்ணா தொடங்கிய தி.மு.க.வை கருணாநிதி குடும்ப கட்சியாக மாற்றியதால் எம்.ஜி.ஆர். அண்ணா பெயரில் கட்சியை தொடங்கினார். அவருக்கு பின் 32 வருட காலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியை காத்தார். ரத்தம் சிந்தி காத்த இந்த இயக்கத்தையும், அ.தி.மு.க. ஆட்சியையும் யாரும் அசைக்க முடியாது, அழிக்க முடியாது. ஜெயலலிதா விரும்பியது போல இன்னும் 100 ஆண்டு காலத்திற்கு இயக்கமும், ஆட்சியும் இருக்கும். 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வக்கீல் ராஜ்குமார், ஐயப்பன், ஜாக்குலின், பத்மநாதன், கார்த்திகேயன், ஜெயபால், மூ.அன்பழகன், பாலசுப்பிரமணியன், எம். ஆர்.ஆர். முஸ்தபா, வெல்லமண்டி சண்முகம், அரசு வழக்கறிஞர்கள் ஜெயராமன், கங்கை செல்வன், வக்கீல்கள் சுரேஷ், வரகனேரி சசிகுமார், சுரேஷ் குப்தா,காசி பாளையம் சுரேஷ்,வணக்கம் சோமு, ஏ.பி.ராமநாதன், ஜெயக்குமார், முகமது ரபீக், அரபுசா, ராஜாளி சேகர், என்.டி. மலையப்பன், ஜெயராஜ், சாத்தனூர் ரமேஷ், ரகமத்துல்லா, அபிராமி சூர்யமூர்த்தி, காளை ராஜன், கல்யாணி முருகன், வரகனேரி ஐயூப், கட்பீஸ் ரமேஷ், கணேசன், சந்ரு உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

SCROLL FOR NEXT