செய்திகள்

ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: அமைச்சர் உதயகுமார்

ஆர்.கே. நகர் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அமைச்சர் உதயகுமார் கூறினார்.

சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் அமைச்சர் உதயகுமார் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். அதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தினகரன் தரப்பு அ.தி.மு.க அரசு மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாகவும், அருமையாகவும் செயல்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT