செய்திகள்

கோடைகாலத்தில் மின்வெட்டு வராது- அமைச்சர் தங்கமணி

கோடை காலத்திற்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் தமிழகத்தில் மின்வெட்டு வராது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #MinisterThangamani

மாலை மலர்

ஓமலூர்:

சேலம் விமான நிலையத்தில் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ள காரணத்தால் நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு மின்சார தேவை 15,448 மெகாவாட் அளவிற்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே கூறியுள்ளதை போல கோடை காலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தாலும் சரி, 16,500 மெகாவாட்டாக இருந்தாலும் சரி, அது தேவையான அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதனால், தமிழகத்தில் மின்வெட்டு வராது.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterThangamani